Friday, November 11, 2011

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் இணையம்


ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது.
கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம்.
இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் ஒரு கணக்கு கொடுத்தால் உடனடியாக அதற்கான விடையும், ஒரு நாட்டைப்பற்றி கேட்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்பதையும், செயற்கைகோள் பற்றி கேட்டால் அதற்கான புள்ளி விபரங்களுடனும் தகவல்களை கொடுக்கின்றது.
ஒரு மருந்தைப் பற்றி கேட்டால் அதற்கான முழுவிபரமும், குறிப்பிட்டை ஊரைப்பற்றி கேட்டால் அந்த ஊரின் செயற்கைகோள் படமும், பிரபலமானவர்களைப்பற்றி கேட்டால் அவர்கள் படம், பிறந்த இடம் மற்றும் பல தகவல்கள் இப்படி பல சேவைகளை சத்தமே இல்லாமல் செய்கிறது இத்தளம்.

0 comments:

Post a Comment