Friday, November 11, 2011

கணனி பாவனையாளர்களே! இதோ உங்களுக்கு சில துணுக்குகள்….


கணனியின் ஊடாக துரித கதியில் பணிகளை ஆற்ற முடியும். குறைந்தளவு நேரத்தில் தரமான முறையில் பணிகளை ஆற்றுவதற்கு கணனி பயன்படுத்தப்படுகின்றது. எனினும், இலத்திரனியல் சாதனமான கணனிகள் பழுதடையக் கூடியவை, அதன் உதிரிப் பாகங்கள் பழுதடையக் கூடும் அல்லது மென்பொருள் சார் பிரச்சினைகள் எழக் கூடும், இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு தடுப்பது.
கணனியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்த தெளிவு இருந்தால் பல ஆயிரம் ரூபாவினை சேமிக்க முடியும் என்பதில் ஐயமில்லை. அதிகமாக கணனிகளில் ஏற்படக் கூடிய கோளாறுகளும் அதற்கான தீர்வுகளும் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.
1.    கணனி செயற்படாமை (PC Start Up Problem)
கணனி ஒன் பட்டனை அழுத்திய போதிலும் அது செயற்படாமல் இருக்கலாம், அவ்வாறான சந்தர்ப்பங்களில் சரியான முறையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும்.
சில வேளைகளில் பிளக்கில் பிரச்சினை இருக்கலாம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறும் ஓரு பிளக்கிற்கு மின்சார இணைப்பை வழங்குவதன் மூலம் கணனியை இயங்கச் செய்யலாம்.
2.    கணனி திரையில் எதுவும் தோன்றாமை (Blank Monitor Screen)
சீ.பி.யூவிற்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும், அவ்வாறு இல்லையென்றால் சீ.பி.யூவிற்கு மின்சாரத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
3.    கிரபிக் கார்ட் பிரச்சினை (Graphic Card Problem)
கணனியுடன் மொனிட்டர் (கணனித்திரை) இணைக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் திரையில் எதுவும் தோன்றாவிட்டால் அது கிரபிக்கார்ட் பிரச்சினையாக இருக்கலாம். கணனியின் கிரபிக் கார்ட்டை அகற்றி புதிய கார்ட் ஒன்றை போடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
4.    மென்பொருள் அல்லது ஒபரேடிங் சிஸ்டம் கோளாறு
ஒபரேடிங் சிஸ்டம் அல்லது ஏனைய மென்பொருட்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கணனியை ரீஸ்ட்டார்ட் செய்து வைரஸ் கார்ட் மென்பொருளின் மூலம் உங்களது கணனியை ஸ்கேன் செய்யவும்.
5.    வின்டோஸ் பூட் கோளாறு (Windows Boot Problem)
வின்டோஸ் ஒபரேடிஸ் சிஸ்டம் உரிய முறையில் பூட்டாக விட்டால், வின்டோஸ் ஒபரடிங் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டும். வின்டோஸ் ரிக்கவரி சீடி மூலம் ரீஇன்ஸ்டோல் செய்ய முடியும்.
6.    உரிய முறையில் கணனி மென்பொருட்கள் செயற்படாமை (Computer Not Responding Properly)
கணனியின் விசைப்பலகை, மவுஸ் அல்லது வேறும் மென்பொருட்கள் ஸ்தம்பித நிலையை அடைவதனை Computer Not Responding Properly என அழைக்கப்படுகின்றது.
பவர் பட்டனை ஐந்து செக்கன்களுக்கு தொடர்ச்சியாக அழுத்துதன் மூலம் கணனியை ஓப் செய்து, மீளவும் ஒன் செய்ய வேண்டும். மீள செயற்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
7.    எக்ஸ்டேர்னல் டிவைஸ் கோளாறு (External Device Problem)
பென் டரைவ்கள், எக்ஸ்டேர்னல் ஹார்ட் டிஸ்கள் போன்ற எக்ஸ்டேர்னல் உதிரிப் பாகங்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால், வழிகாட்டல்களை பயன்படுத்தவும். குறித்த எக்ஸ்டேர்னல் பாகங்கள் தொடர்பான வழிகாட்டல்களை வாசித்து அதன் படி அவற்றை செயற்படுத்தவும்.
உரிய முறையில் பொருத்தப்படாமல் இருக்கலாம் அல்லது அதற்கான மென்பொருள் உரிய முறையில் இன்ஸ்டால் செய்யப்படாமல் இருக்கலாம் இவை தொடர்பில் கவனம் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
8.    கணனி மெதுவாக இயங்குதல் (Slow working computer)
கணனியின் ஹார்ட் டிஸ்கை க்ளீன் செய்வதன் மூலம் வேகத்தை அதிகரிக்க முடியும். குறிப்பாக தேவையற்ற கோப்புக்கைள அழித்தல் மூலம் கணனியின் செயற்திறனை அதிகரிக்க முடியும்.
9.    இணையம் மெதுவாக செயற்படுதல் (Slow Internet Working)
டெம்பரரி இன்டர்நெட் கோப்புக்கள் மற்றும் கூக்கீஸ்களை அழிப்பதன் மூலம் இணையத்தை வேகமாக்க முடியும். தேவையற்ற கோப்புக்களை அழிப்பதன் மூலம் இணையத்தின வேகத்தை அதிகரிக்க முடியும். சேர்ச் பாரில் “%temp%”என டைப் செய்து டெம்பரரி கோப்புக்களை தேடி அழிக்க முடியும்.
இவ்வாறு தேடப்படும் கோப்புக்கள் அனைத்தையும் அழிப்பதற்கு ஒருங்கே Ctrl+A  ஆகியவற்றை அழுத்தி கோப்புக்களை செலக்ட் செய்ய முடியும். பின்னர் Delete  பட்டனை அழுத்துவதன் மூலம் கோப்புக்களை அழிக்க முடியும்.
10.    நெட்வர்க் பிரச்சினை (Internet network problem)
இணைய நெட்வர்க் செயலிழந்து காணப்பட்டால், ஐP முகவரியை சரிபார்க்கவும். அல்லது நெட்வர்க் கேபிள்கள் முறையாக பொருத்தப்பட்டுள்ளன என்பதனையும் சரிபார்க வேண்டும்.
நெட்வர்க்குடன் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் உரிய முறையில் செயற்படுகின்றனவா என்பதனையும் சரிபார்க்க வேண்டும். இவ்வாறு பரிசீட்பதன் மூலம் நெட்வர்க் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

0 comments:

Post a Comment