sign-in, sign-out வட்டத்திற்குள் நுழையாமல் ஒரே பிரவுசரில் வித்தியாசமான கணக்குகளுக்கிடையில் toggle (இருநிலை மாற்றி) செய்வதற்கான இலகுவான பல sign-in சிறப்பியல்புகளை கூகுள் வழங்குகிறது.
இதனை நீங்கள் with Gmail, Google Docs, Reader, Google Calendar, Web Search உட்பட ஏனைய கூகுள் தயாரிப்புகளிலும் பயன்படுத்த முடியும்.
A:-வெவ்வேறான கூகுள் கணக்குகளுக்குள் எவ்வாறு swith (நிலைமாற்றம்) செய்வது?
நாம் இரண்டு வெவ்வேறான கூகுள் கணக்குகளுக்குள் இருக்கின்றோம் என வைத்துக்கொள்வோம். பலதரப்பட்ட sign-in களில் இருக்கின்ற பொழுது மற்றுமொரு கணக்கினை sign-in செய்ய விரும்பினால் என்ன செய்வது?
பிரபலமான தெரிவு எது என்றால், நீங்கள் உங்கள் இமெயில் முகவரியை கூகுள் பாரில் கிளிக் செய்து “Switch Account” என்பதைத் தெரிவு செய்து அதிலிருந்து drop-down menu மூலமாக மற்ற கூகுள் அல்லது Gmail கணக்கிற்குள் நுழைவது தான்.
இருந்தாலும் மிக எளிதாக செய்யக்கூடிய இரண்டாவது தெரிவும் உள்ளது. உங்களுடைய பிரவுசர் அட்ரஸ் பாரிற்குச் செல்லுங்கள். எளிதாக URL இல் இலக்கங்களை மாற்றம் செய்யுங்கள். நீங்கள் பலதரப்பட்ட sign-inகளை பாவிக்கும் பொழுது கூகுள் உங்களுடைய Gmail URL களில் ஒரு இலக்கத்தினை பின் இணைப்பு செய்யும்.
நீங்கள் அந்த இலக்கங்களைத் தான் மாற்ற வேண்டும். பதிலீடாக, இந்த URL களை உங்களுடைய புக்-மார்க் பாரில் நேரடியாக இணைத்து பாவிக்கவும் முடியும்.
B. ஏதாவது கூகுள் கணக்குகளை Default sign-in ஆக அமைப்பது
நீங்கள் கூகுள் வெப்சைட்கள் எதையாவது திறக்கும் பொழுது அது தானாகவே உங்களுடைய default கணக்குகளைப் பாவித்து sign-in செய்யும். சில வேளைகளில் கூகுளால் அமைக்கப்பட்ட இந்த Default கணக்கு உங்களுடைய பிரதான கணக்காக இல்லாமல் போனால் நீங்கள் கூகுள் சேவையைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் மற்றொரு கணக்கை திறக்க வேண்டி ஏற்படும்.
இதைத் தவிர்க்க உங்கள் விருப்பத் தெரிவுகளுக்கமைய கணக்குகளை வரிசைப்படுத்தி அமைக்க முடியும். அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
படிமுறை 1: உங்களுடைய எல்லா கூகுள் கணக்குகளையும் sign-out செய்வதற்கு google.com/accounts/Logoutஇனைத்திற்குச் செல்லுங்கள்.
படிமுறை2:அடுத்து google.com/accounts/b/0/MultipleSessions இற்குச் சென்று default ஆக அமைக்க வேண்டிய கணக்கினைப் பயன்படுத்தி sign-in செய்யுங்கள்.
படிமுறை3: இப்பொழுது நீங்கள் google.com/accounts/AddSession இற்குச் சென்று உங்களுடைய ஏனைய கூகுள் கணக்கினை திறவுங்கள். நீங்கள் உங்களுடைய எல்லா கணக்குகளையும் இதே முறையைப் பயன்படுத்தித் திறவுங்கள். அவ்வளவு தான். தற்போது நீங்கள் sign-in செய்யும் ஒழுங்கான வரிசையை அமைத்துள்ளீர்கள்.

0 comments:
Post a Comment